< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
பாம்பு கடித்து பெண் சாவு
|4 Sept 2023 12:30 AM IST
அரூர்:
தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள கீரைப்பட்டியை சேர்ந்தவர் சின்னையன். இவருடைய மனைவி சென்னம்மாள் (வயது 48). இவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் விவசாய பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது அவருக்கு பூச்சி கடித்தது போல் வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோட்டப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அப்போது அவரை பாம்பு கடித்திருப்பது தெரியவந்தது. பின்னர் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.