< Back
மாநில செய்திகள்
கார் மோதி மூதாட்டி சாவு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

கார் மோதி மூதாட்டி சாவு

தினத்தந்தி
|
3 Aug 2023 7:30 PM GMT

மத்திகிரி:

ஓசூர் தாலுகா கொத்தகொண்டப்பள்ளி அருகே உள்ள நஞ்சாபுரத்தை சேர்ந்த ராமையா மனைவி முனியம்மா (வயது 85). இவர் ஓசூர்- அத்திப்பள்ளி சாலையில் நஞ்சாபுரம் விநாயகர் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் முனியம்மா மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனியம்மா இறந்தார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்