< Back
மாநில செய்திகள்
மொரப்பூர் அருகேலாரி மோதி ராணுவ வீரர் சாவு
தர்மபுரி
மாநில செய்திகள்

மொரப்பூர் அருகேலாரி மோதி ராணுவ வீரர் சாவு

தினத்தந்தி
|
18 July 2023 7:30 PM GMT

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள எலவடை கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ். இவரது மகன் பூவரசன்(வயது 27). இவர் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் எலவடையில் இருந்து மொரப்பூர் நோக்கி சென்றார். அப்போது அய்யர் கொட்டாய் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியத. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்