< Back
மாநில செய்திகள்
அன்புள்ள அப்பா.. அப்பா...: தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை
மாநில செய்திகள்

"அன்புள்ள அப்பா.. அப்பா"...: தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
25 Feb 2024 5:18 PM IST

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் வேம்பு. இவருடைய மகன் ராம்சங்கர் (வயது 29). இவர் ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை. இதற்கிடையே கடந்த 3 மாதத்திற்கு முன்பு வேம்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். தந்தை இறந்ததில் இருந்து ராம்சங்கர் மனம் உடைந்து காணப்பட்டார். இதனால் அவர் மனஉளைச்சலுக்கு உள்ளானார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ராம்சங்கரின் தாயார் அருகில் உள்ள மகள் வீட்டுக்கு தூங்க சென்றார். ராம்சங்கர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்து மகனை எழுப்ப அறைக்கு சென்றார். அப்போது ராம்சங்கர் மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ராம்சங்கர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்