< Back
மாநில செய்திகள்
வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்
திருச்சி
மாநில செய்திகள்

வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம்

தினத்தந்தி
|
5 Oct 2023 12:26 AM IST

வியாபாரியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

பொன்மலைப்பட்டி:

திருவெறும்பூர் அருகே உள்ள மேல அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் பாலன்(வயது 55). இவர் பழைய பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 30-ந் தேதி திருவெறும்பூரை அடுத்த காட்டூர் மஞ்சத்திடல் பாலம் அருகே திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அவர் மீது பின்னால் வந்த ஆட்டோ மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த பாலனை, திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மணிமேகலை (45) அளித்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே இறந்த பாலனின் உடல் உறுப்புகளை, தனியார் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் தானம் செய்தனர். இந்நிலையில் இறப்புக்குப் பின்னர் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி பாலனின் உடலுக்கு, திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி நேற்று அரசு சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன், வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்