புதிய அணு உலைகளை அமைக்க ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது -ராமதாஸ் அறிக்கை
|கூடங்குளம் அணுமின் திட்டத்தின் அடுத்தக்கட்டமாக புதிய அணு உலைகளை அமைப்பது தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டிருக்கின்றன.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் அடுத்தக்கட்டமாக புதிய அணு உலைகளை அமைப்பது தொடர்பான மிக முக்கியமான ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டிருக்கின்றன.
தென் தமிழகத்தின் பாதுகாப்புக்கு கூடங்குளம் அணு உலைகள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதால் அவற்றை மூட வேண்டும் என்று கோரிக்கைகள் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படும் நிலையில், புதிய அணு உலைகளை அமைக்க ரஷ்யாவுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பது அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளிக்கிறது.
இறுதியாக கூடங்குளம், -விஜயபதி ஆகிய கிராமங்களில் தற்காலிக அணுக்கழிவு மையம் அமைக்கப்படவுள்ளது.
7 மற்றும் 8-ம் அணு உலைகளும் கூடங்குளத்திலேயே அமைக்கப்பட்டால் மொத்தமுள்ள 8 உலைகளிலும் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள்களின் கழிவுகளும் அங்கு தான் சேமிக்கப்படும். அது ஒட்டுமொத்த தமிழகத்தையும், கேரளத்தையும் அணுகுண்டு குவியல் மீது அமர வைப்பதற்கு ஒப்பாகும். மின்னுற்பத்தி என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு இவ்வளவு பெரிய ஆபத்தை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடாது.
அண்மையில் காயல்பட்டினத்தில் இரு நாள்களில் கொட்டிய 116 செ.மீ மழை கூடங்குளத்தில் பெய்து அணு உலைகளில் வெள்ளம் ஏற்பட்டால் என்னவாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது.
தமிழ்நாட்டை பேரழிவில் இருந்து காப்பாற்ற வேண்டுமானால், கூடங்குளத்தில் புதிய அணு உலைகளை அமைப்பதற்காக இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை கைவிட வேண்டும்.
அங்கு நடைபெற்று வரும் நான்கு அணு உலைகளின் கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.