< Back
மாநில செய்திகள்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் காத்திருப்பு போராட்டம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காது கேளாதோர் காத்திருப்பு போராட்டம்

தினத்தந்தி
|
2 July 2022 11:41 AM IST

திருவள்ளூர் மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் நேற்று திருவள்ளூர் மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்ட காதுகேளாதோர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அமீம் தலைமை தாங்கினார். இதில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளானோர் காதுகேளாதோர் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் காதுகேளாதோருக்கு ஒரு சதவிகிதம் படி வேலை வழங்க வேண்டும்.

வறுமை கோட்டின் கீழ் உள்ள அனைவருக்கும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும், ஓட்டுனர் உரிமம் வழங்க முகாம் நடத்த வேண்டும், மாதாந்திர உதவி தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றத்திறனாளிகளுக்கு பணி நியமன வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆவின் பாலகம் அமைத்துக்கொடுக்க வேண்டும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் காதுகேளாதோர் கூட்டமைப்பு நிர்வாகிகளை மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச்சென்றனர்.

அப்போது அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனுவை அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்