புதுக்கோட்டை
இறந்து கிடந்த புள்ளிமான்
|புள்ளிமான் இறந்து கிடந்தது.
அன்னவாசல் அருகே 1,500 ஏக்கர் பரப்பளவில் அரசுக்கு சொந்தமான அண்ணாபண்ணை உள்ளது. இங்கு அதிக அளவில் மான்கள் உள்ளது. இந்தநிலையில் அங்கிருக்கும் மான்கள் தண்ணீர் தேடி சில நேரங்களில் காட்டைவிட்டு வெளியேறும் போது வாகனங்களில் அடிபட்டும், நாய்களிடம் சிக்கி செத்து போவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அன்னவாசல் அருகே உள்ள பிள்ளையப்பட்டி ஆற்றங்கரை ஓரமாய் ஆண் புள்ளிமான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும், அதனை நாய்கள் கடித்துக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிலர் அங்கு சென்று பார்த்தபோது புள்ளிமானை நாய்கள் கடித்து கொண்டிருந்துள்ளது. இதனை பார்த்த சிலர் நாய்களை துரத்திவிட்டு இறந்து கிடந்த புள்ளி மானை மீட்டு புல்வயல் கொண்டு வந்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்து, அவர்கள் வந்தவுடன் இறந்த மானை ஒப்படைத்தனர்.