< Back
மாநில செய்திகள்
ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஏரியில் செத்து மிதந்த மீன்கள்

தினத்தந்தி
|
14 Sep 2023 7:01 PM GMT

ஏலகிரி ஊராட்சி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தன.

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ரெயில்வே ஜங்ஷன் அருகே ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள மீன்களை பொதுமக்கள் தூண்டில் மூலமாகவும், வலை விரித்தும் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை ஏரி கரையோரம் மீன்கள் செத்து மிதந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி மன்ற தலைவர் ரகு ஏரிக்கு சென்று பார்வையிட்டார்.

அப்போது 500 கிலோவுக்கு மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ஜோலார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின்பேரில் அங்கு வந்த சுகாதாரத்துறையினர் செத்து மிதந்த மீன்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது மீன்களுக்கு தற்போது அம்மை நோய் வந்திருப்பதாகவும், இதனால் மீன்கள் இறக்கும் நிலை ஏற்படுவதாகவும் எனவே மீன்களை பிடித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து ஏரியில் ஆங்காங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்த நபர்களிடம், யாரும் மீன் பிடிக்க வேண்டாம் என ஊராட்சி மன்ற தலைவர் வலியுறுத்தினார்.

மேலும் இது குறித்து அப்பகுதி மக்களுக்கு ஆட்டோ மூலம் எச்சரிக்கை விளம்பரம் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்