< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
ஏரியில் செத்து மிதந்த மீன்கள்
|23 Aug 2023 12:15 AM IST
பெண்ணாடம் அருகே ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் கிராமமக்கள் பீதி அடைந்தனர்.
பெண்ணாடம்
பெண்ணாடம் அருகே பெ.பூவனூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று 100-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தன. இதை பார்த்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து ஏரியை குத்தகை எடுத்துள்ள செந்தில்குமார் கூறுகையில், ஏரியில் அதிக மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. ஏரியில் உள்ள நீரை கால்நடைகள் குடிப்பதால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுேமா என்று கிராம மக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே ஏரியின் நீரை எடுத்து ஆய்வு செய்து, மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து கண்டறிய வேண்டும் என்றார்.