< Back
மாநில செய்திகள்
தென்கரை வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்
கரூர்
மாநில செய்திகள்

தென்கரை வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்

தினத்தந்தி
|
25 March 2023 12:00 AM IST

லாலாபேட்டை தென்கரை வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செத்து மிதக்கும் மீன்கள்

கரூர் மாவட்டம், மாயனூர் கதவணை அருகே காவிரியில் இருந்து தென்கரை வாய்க்கால் பிரிந்து லாலாபேட்டை பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கிறது. இந்த வாய்க்கால் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பயன் அடைந்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வாய்க்காலில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதனால் வாய்க்காலில் பள்ளமான பகுதியில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாய்க்காலில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் உள்ள மீன்கள் ஆங்காங்கே செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கோரிக்கை

இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்து செல்கின்றனர். மேலும் செத்து மிதக்கும் மீன்களில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை தூய்மைப்படுத்தி, அந்த மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்