< Back
மாநில செய்திகள்
ஏரியில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

ஏரியில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு

தினத்தந்தி
|
27 Sep 2023 7:30 PM GMT

ஏரியில் செத்து மிதந்த மீன்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பாப்பிரெட்டிப்பட்டி:-

தர்மபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டையில் அமைந்துள்ள பெரிய ஏரி வாணியாற்றில் இருந்து கால்வாயின் மூலம் நீர் பெறுகிறது, தற்போது ஏரியில் 75 சதவீதத்திற்கும் மேலாக நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் பொது பணி துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த ஏரிகரையில் ஏராளமான மீன்கள் இறந்ததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஆண்டு தென்கரைக்கோட்டை ஏரியில் மீன் பிடிக்க பொது ஏலம் விடப்பட்டிருந்தது. இந்த ஏரியில் மீன்பிடிக்க ஏலம் எடுத்தவரே அருகில் உள்ள மற்றொரு ஏரியும் குத்தகை எடுத்துள்ளார். இந்நிலையில் மற்றொரு ஏரியில் இருந்து பிடிக்கப்பட்ட சுமார் 100 கிலோ அளவிலான மீன்களை தென்கரைக்கோட்டை ஏரியில் நேற்று முன்தினம் விட்டுள்ளார். இதில் ஏரி மாறி வந்த நிலையில் சுற்றுச்சூழல் மாறுபாடு, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக சுமார் 50 கிலோவிற்கும் மேற்பட்ட மீன்கள் இறந்து விட்டதாக தொிகின்றது. மீன்கள் இறந்ததன் காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் வீசிவருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்