< Back
மாநில செய்திகள்
வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்
திருச்சி
மாநில செய்திகள்

வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்

தினத்தந்தி
|
21 April 2023 2:50 AM IST

வாய்க்காலில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

சமயபுரம்:

செத்து மிதக்கும் மீன்கள்

சமயபுரத்தில் ச.கண்ணனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் பெருவளை வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீரை சமயபுரம், மருதூர், மாகாளிகுடி, வி. துறையூரை சேர்ந்த பொதுமக்களும் மற்றும் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களும் குளிப்பதற்காக பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் இந்த வாய்க்காலில் கடந்த 3 நாட்களாக ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அந்த வாய்க்காலை கடந்து செல்லும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இது குறித்து ச.கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தண்ணீரில் மீன்கள் செத்து மிதப்பதால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு, வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்தவும், தொற்று நோய் பரவாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்