< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

தினத்தந்தி
|
23 Dec 2022 12:08 AM IST

பெரம்பலூர் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பெரம்பலூர்-துறையூர் சாலையில் பழைய நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான தெப்பக்குளம் மீண்டும் நிரம்பி ரம்மியாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் அந்த தெப்பக்குளத்தில் தற்போது மீன்கள் செத்து மிதந்து வருவததோடு, துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினர் தெப்பக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்களையும் மற்றும் குப்பைகளையும் அகற்றி குளத்தை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்று தெப்பக்குளத்தை சுற்றி நடைபயிற்சியில் ஈடுபடும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்