திருவாரூர்
மன்னார்குடி ராவணன் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
|மன்னார்குடி ராவணன் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
மன்னார்குடி ராவணன் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.
குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
மன்னார்குடி கனகாம்பால் கோவில் தெருவில் ராவணன் குளம் உள்ளது. இந்த குளத்தில் நேற்று காலை மீன்கள் செத்து மிதந்தன. மீன்கள் இறந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மூக்கை பிடித்து கொண்டு கடந்தனர். சஞ்சீவி தெருவில் கழிவு நீர் கால்வாயில் செல்லும் சாக்கடை கழிவுகள் இந்த ராவணன் குளத்தில் கலப்பதால் மீன்கள் இறந்ததாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
அப்புறப்படுத்தப்பட்டது
இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக குளத்திற்கு வந்த மன்னார்குடி நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த நகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து குளத்தில் இறந்து கிடந்த மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
குளத்தில் கழிவு நீர் கலப்பதை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைவர் கூறினார். அப்போது அவருடன் நகர்மன்ற உறுப்பினர் திருச்செல்வி அமிர்தராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.