< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
சித்தேரி ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
|4 Aug 2022 10:05 PM IST
பெரணமல்லூர் சித்தேரி ஏரியில் மீன்கள் செத்து மிதந்தது
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர்பேரூராட்சியில் அஸ்தினாபுரம் நகர் அருகே பொதுப்பணி துறைக்கு சொந்தமான சித்தேரி ஏரி உள்ளது.
இந்த ஏரியில் மீன்கள் இறந்து மிதக்கின்றன.இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சன்னியாசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேரில் வந்து பார்வையிட்டார்.
மீன்கள் செத்து மிதப்பதற்கான காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.