< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
விவசாய கிணற்றில் செத்து மிதந்த மீன்கள்
|1 Oct 2022 10:51 PM IST
விவசாய கிணற்றில் மீன்கள் செத்து மிதந்தது. விஷம் கலக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அயோத்தியாப்பட்டணம்:-
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பள்ளிப்பட்டி அருகே உள்ள ஏரிக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு சொந்தமான விவசாய கிணறு அந்த பகுதியில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த கிணற்றில் திடீரென 300-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தன. மேலும் கிணற்றின் தண்ணீரும் நிறம் மாறி, நீல நிறத்தில் காணப்பட்டது. இதனால் கிணற்றில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் இதுகுறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே விவசாய கிணற்றில் விஷம் கலக்கப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.