< Back
மாநில செய்திகள்
மதுரை அருகே வைகை ஆற்றுப்பாலத்தில் வாலிபர் பிணம்- கொலையா? போலீஸ் விசாரணை
மதுரை
மாநில செய்திகள்

மதுரை அருகே வைகை ஆற்றுப்பாலத்தில் வாலிபர் பிணம்- கொலையா? போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
10 Aug 2023 3:41 AM IST

மதுரை அருகே வைகை ஆற்றுப்பாலத்தில் வாலிபர் பிணம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா என விசாரித்து வருகின்றனர்.

வாடிப்பட்டி

மதுரை அருகே வைகை ஆற்றுப்பாலத்தில் வாலிபர் பிணம் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா என விசாரித்து வருகின்றனர்.

வாலிபர்

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பாப்பாத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சோலை பாண்டி. இவர் கம்பி கட்டும் வேலை செய்து கொண்டு பரமக்குடியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். சோலை பாண்டி மகன் தீபக்(வயது19). இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தந்தை சோலை பாண்டியுடன் கம்பி கட்டும் வேலைக்கு சென்று வந்தார்.

வாலிபர் தீபக் கடந்த 3 மாதங்களாக சமயநல்லூரில் உள்ள தாத்தா பாண்டி வீட்டில் தங்கி இருந்தார்.

கொலையா?

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை தீபக், சமயநல்லூர் பவர் அவுசை சேர்ந்த நண்பர்கள் 3 பேருடன் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று காலை பரவை டாஸ்மாக் கடை அருகில் வைகை ஆற்றுப்பாலத்தின் கீழ் தலை, முதுகு உள்ளிட்ட பல இடங்களில் காயங்களுடன் தீபக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அவர் எப்படி இறந்தார் என தெரியவில்லை. உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாரேனும் கொலை செய்தார்களா என்று தெரியவில்லை.

இதுகுறித்து சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்