< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
பெரியகுளம் அருகே கிடந்த முதியவர் பிணம்
|11 Dec 2022 12:15 AM IST
பெரியகுளம் அருகே முதியவர் பிணம் கிடந்தது.
பெரியகுளம் அருகே வரட்டாறு பாலத்தின் கீழே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் பிணம் கிடந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பாா்த்து தென்கரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அ.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சின்னராமு (வயது 60) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.