< Back
மாநில செய்திகள்
தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி - விசாரணை ஒத்திவைப்பு
மாநில செய்திகள்

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜரான எடப்பாடி பழனிசாமி - விசாரணை ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
14 May 2024 11:54 AM IST

வழக்கின் விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த மாதம் 15-ந்தேதி சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில் "நம்மை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிடும் நபர்(தயாநிதி மாறன்) தனது சொந்த நலனுக்காகப் போட்டியிடுகிறார். எம்பியாக உள்ள அவர், தனது நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியில் சுமார் 75 சதவீத நிதியைச் செலவே செய்யவில்லை" என்று பேசியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு எதிராகத் தயாநிதி மாறன் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். உண்மைத் தன்மையை ஆராயாமல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார் என்றும் இது உண்மைக்குப் புறம்பானது என்றும் மக்கள் மத்தியில் தனக்கு உள்ள நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார் என்றும் அவர் அதில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று எழும்பூர் கோர்ட்டில் ஆஜரானார். இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்