< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஏஃப்.எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
|15 Sept 2022 3:42 PM IST
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஏஃப்.எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
சென்னை,
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஏஃப்.எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித் தேர்வு நடைபெறும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் 11, 12,13,14,15 மற்றும் 20 ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி நவம்பர், 1, 2, 3, 4, 5 & 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான அட்டவணை tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.