< Back
மாநில செய்திகள்
மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்
வேலூர்
மாநில செய்திகள்

மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம்

தினத்தந்தி
|
17 Oct 2023 11:19 PM IST

விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் நடிகை சினேகா சாமி தரிசனம் செய்தார்.

நடிகை சினேகா, அவரது கணவரும், நடிகருமான பிரசன்னா ஆகியோர் நேற்று பள்ளிகொண்டாவை அடுத்த விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மார்க்கபந்தீஸ்வரரை தரிசனம் செய்து, கோவில் பிரகாரம் மற்றும் ராஜகோபுரத்தை சுற்றி வந்து தரிசனம் செய்தனர்.

அதன்பிறகு அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நேரத்தில் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் நடிகை சினேகாவுடன் தங்கள் செல்போன்களில் செல்பி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக ஸ்ரீபுரம் தங்க கோவிலில் நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியினர் தரிசனம் செய்து, சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றனர்.

மேலும் செய்திகள்