< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமி தரிசனம்
|1 Sept 2023 8:20 PM IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வணங்கான் திரைப்பட படப்பிடிப்பு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண்விஜய் கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் அருண்விஜய் சாமி தரிசனம் செய்தார்.
சம்பந்த விநாயகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவருக்கு கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவிலுக்கு வந்த நடிகர் அருண்விஜயை கண்டதும் ரசிகர்கள் பலர் அவரை சூழ்ந்து கொண்டு செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.