< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாழிக்கிணறு, வள்ளி குகை தரிசன கட்டணம் ரத்து
மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாழிக்கிணறு, வள்ளி குகை தரிசன கட்டணம் ரத்து

தினத்தந்தி
|
8 July 2022 2:21 PM IST

மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை, மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி ஆகிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தூத்துக்குடி,

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாழிக்கிணற்றில் புனித நீராடவும், வள்ளி குகை தரிசனத்திற்குமான கட்டணம் இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராடுவதற்கும், வள்ளி குகையில் தரிசனம் செய்தவதற்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை, மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி ஆகிய வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்