< Back
மாநில செய்திகள்
தர்மபுரி ராகவேந்திரர் கோவிலில்சீனிவாச திருக்கல்யாண உற்சவம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி
மாநில செய்திகள்

தர்மபுரி ராகவேந்திரர் கோவிலில்சீனிவாச திருக்கல்யாண உற்சவம்திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தினத்தந்தி
|
17 July 2023 1:00 AM IST

தர்மபுரி:

தர்மபுரி விருபாட்சிபுரம் உடுப்பி புத்திகே மடக்கிளையான ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பிருந்தாவன கோவில் 48-வது ஆண்டு பிருந்தாவன பிரதிஷ்டையையொட்டி சீனிவாச திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சுப்ரபாதத்துடன் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடு நடந்தது. பின்னர் உபகார பூஜைகளும், மகா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து சீர்வரிசைகளுடன் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சென்னை மடிப்பாக்கம் ஸ்ரீ வெங்கடேச கல்யாண பஜனை குழுவை சேர்ந்த கோதாவரி பாய், பிருந்தா ரகுநாதன் ஆகியோர் இந்த திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் பங்கேற்ற நாட்டிய, நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இது தொடர்ந்து தர்மபுரி பாண்டுரங்க விட்டலா பஜனை குழுவினரின் சிறப்பு பஜனையும், வெள்ளி ரத உற்சவமும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தர்மபுரி புத்திகே மடக்கிளை நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்