< Back
மாநில செய்திகள்
ஆவடி மாநகராட்சி கமிஷனராக தர்பகராஜ் பொறுப்பேற்றார்
சென்னை
மாநில செய்திகள்

ஆவடி மாநகராட்சி கமிஷனராக தர்பகராஜ் பொறுப்பேற்றார்

தினத்தந்தி
|
3 Jun 2022 1:49 PM IST

ஆவடி மாநகராட்சி கமிஷனராக முதல் முறையாக தர்பகராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் நகராட்சியாக இருந்த ஆவடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அன்று முதல் கடந்த மே மாதம் வரை ஆவடி மாநகராட்சியில் இணை இயக்குனர் அந்தஸ்தில் இருந்த 5 பேர் கமிஷனர்களாக பதவி வகித்தனர்.

இந்தநிலையில் ஆவடி மாநகராட்சிக்கு தர்பகராஜ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியை கமிஷனராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஆவடி மாநகராட்சி கமிஷனராக முதல் முறையாக தர்பகராஜ் பொறுப்பேற்றுக்கொண்டார்.

அவருக்கு ஆவடி மாநகராட்சியின் அனைத்து பிரிவு அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்