< Back
மாநில செய்திகள்
சரக்கு ஆட்டோவில் ஆபத்தான பயணம்
திருவாரூர்
மாநில செய்திகள்

சரக்கு ஆட்டோவில் ஆபத்தான பயணம்

தினத்தந்தி
|
10 Aug 2023 12:14 AM IST

மன்னார்குடியில், சரக்கு ஆட்டோவில் ஆபத்தான முறையில் மக்கள் பயணம் செய்கிறாா்கள். எனவே விபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மன்னார்குடி;

மன்னார்குடியில், சரக்கு ஆட்டோவில் ஆபத்தான முறையில் மக்கள் பயணம் செய்கிறாா்கள். எனவே விபத்து ஏற்படும் முன்பு அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சரக்கு வாகனங்கள்

திருவாரூா் மாவட்டம் மன்னார்குடியில், சரக்கு ஆட்டோவில் காலை நேரத்தில் கட்டிட வேலை, விவசாய வேலைக்கு செல்லும் கூலி தொழிலாளர்களை அதிக அளவு ஏற்றி செல்கிறார்கள்.பொருட்களை மட்டுமே ஏற்றி செல்ல அனுமதி பெற்ற வாகனங்களில் மனிதர்களை ஏற்றி செல்வது விபத்தை ஏற்படுத்தும். சரக்கு வாகனங்களில் ஆட்களை அதிக அளவு ஏற்றிச் செல்லும்போது வாகனங்கள் கவிழ்ந்து விபத்து ஏற்படுவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

நடவடிக்கை

இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும் அதிகாரிகளுக்கு தெரியாமல் வெளிப்புற சாலைகளில் சரக்கு ஆட்டோக்களில் அதிக அளவு ஆட்களை ஏற்றி செல்கிறார்கள். எனவே .சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் நகரின் வெளிப்புற சாலைகளில் ஆய்வு செய்து ஆட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்