நாமக்கல்
ராசிபுரத்தில்ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் ஆபத்தான பயணம்
|ராசிபுரம்:
மோட்டார் சைக்கிள், மொபட் மற்றும் ஸ்கூட்டர்களில் 2 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது. ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது என்று போலீசார் அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ராசிபுரத்தில் ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்தனர். அதாவது ஆண்டகளூர் கேட் பகுதியில் இருந்து அவர்கள் ராசிபுரம் நகருக்குள் வந்தனர். அவர்கள் கையில் கடப்பாரை போன்ற கருவிகளை வைத்திருந்ததால் அவர்கள் கூலித்தொழிலாளர்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 4 பேரில் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது போன்ற ஆபத்தான பயணத்தை சம்பந்தப்பட்ட நபர்கள் மேற்கொள்ளக்கூடாது. ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர், 3 பேர் என ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும்போது ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருக்கும் போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.