< Back
மாநில செய்திகள்
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை நடன ஆசிரியருக்கு தர்ம அடி
சென்னை
மாநில செய்திகள்

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை நடன ஆசிரியருக்கு தர்ம அடி

தினத்தந்தி
|
16 Aug 2023 12:58 PM IST

திரு.வி.க நகர்,

சென்னை முகப்பேரில் பிரபல தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அண்ணா நகரை சேர்ந்த 6 வயது சிறுமி படித்து வருகிறார். பள்ளியில் பணிபுரியும் நடன ஆசிரியர் வேணுகோபால் (வயது 41) என்பவர் அந்த சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோரும், அவரது உறவினர்களும் பள்ளிக்கு சென்று நடன ஆசிரியரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து சரமாரியாக தாக்கினர். இதனால் பள்ளி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வேணுகோபாலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தினர். மேலும் இது குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்