< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
சேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டது
|16 Oct 2023 11:13 PM IST
சேதமடைந்த குடிநீர் தொட்டி சீரமைக்கப்பட்டுள்ளது.
தாந்தோணி ஒன்றியம் ஜெகதாபி ஊராட்சி ஆனந்தகவுண்டனூரில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. அதில் நீர் நிரப்பப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த குடிநீர் தொட்டி தொடர் பராமரிப்பு இல்லாமல், தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என தினத்தந்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும், குடிநீர் தொட்டியின் தூண்களை சிமெண்டு பூச்சுகள் கொண்டு பூசி சீரமைத்தனர். இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.