< Back
மாநில செய்திகள்
கீழப்பெருமழை ஊராட்சியில் சேதமடைந்த பயணிகள் நிழலகம்
திருவாரூர்
மாநில செய்திகள்

கீழப்பெருமழை ஊராட்சியில் சேதமடைந்த பயணிகள் நிழலகம்

தினத்தந்தி
|
29 Aug 2023 12:15 AM IST

கீழப்பெருமழை ஊராட்சியில் சேதமடைந்த பயணிகள் நிழலகம்

முத்துப்பேட்டையை அடுத்த கீழப்பெருமழை ஊராட்சியில் உள்ள விளாங்காடு, மேலபெருமழை செல்லும் சாலையில் பயணிகள் நிழலகம் உள்ளது. இந்த நிழலகத்தில் இருந்து மேல பெருமழை செல்லும் பயணிகளும் இடும்பாவனம் விளங்காடு, தொண்டியகாடு, திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும் தினமும் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். மேலும் மாணவர்களும் இந்த நிழலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த நிழலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. மேலும் கட்டித்தில் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் மாணவர்களும், பயணிகளும் கட்டிடத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பயணிகளின் நலன் கருதி சேதமடைந்த பயணிகள் நிழலகத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிதாக கட்டித்தர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்