< Back
மாநில செய்திகள்
படகு குழாமில் பழுதடைந்த படகுகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

படகு குழாமில் பழுதடைந்த படகுகள்

தினத்தந்தி
|
20 Aug 2022 11:21 PM IST

கல்வராயன்மலையில் படகு குழாமில் பழுதடைந்த படகுகள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

கச்சிராயப்பாளையம்

இயற்கை எழில்மிகுந்த கல்வராயன்மலை ஏழைகளின் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு விழுப்புரம், கடலூர, சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளி்டட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பொழுது போக்கி மகிழ்வதற்காக கரியாலூர்- வெள்ளிமலை சாலையில் வனத்துறை சார்பில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 9 பெடல் படகுகளில் சுற்றுலா பயணிகள் சவாரி செய்து மகிழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது இந்த படகுகள் அனைத்தும் பழுதடைந்து விட்டதால் அவற்றை பயன்படுத்த முடியாததால் அந்த படகுகளை வனத்துறையினர் கரையோரமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

இதையடுத்து கல்வராயன்மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வந்து திரும்பி செல்லக்கூடாது என்பதற்காக படகு குழாம் செல்லும் நுழைவு பகுதியின் குறுக்கே வனத்துறையினர் 2 சவுக்கு கட்டைகளை கட்டி தடுப்பு அமைத்துள்ளனர். இதனால் கல்வராயன்மலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தடுப்பு கட்டையில் நின்று பார்த்துவிட்டு எமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். பழுதடைந்த படகுகளை அப்புறப்படுத்திவிட்டு அதற்கு பதிலாக புதிய படகுகளை வனத்துறையினர் நிறுத்தி வைக்க வேண்டும் என சுற்றுலாபயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்