விருதுநகர்
தெப்பக்குளத்தின் படிக்கட்டுகள் சேதம்
|வத்திராயிருப்பு அருகே கோவில் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகள் ேசதம் அடைந்து இருப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே கோவில் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகள் ேசதம் அடைந்து இருப்பதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
உதயகிரிநாதர் கோவில்
வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் ஊராட்சிக்கு உட்ப்பட்ட மாவூத்தில் உதயகிரி நாதர், சடதாரியம்மன், கருப்பசாமி கோவில், ஆஞ்சநேயர் கோவில், மலையின் உச்சியில் பெருமாள் கோவில் ஆகியவை அமைந்துள்ளது.
இந்தகோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி, புரட்டாசி, சித்திரை திருவிழா, மாதந்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அடிப்படை வசதி
விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு பக்தர்கள் வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள தெப்பக்குளம் பராமரிப்பு இன்றி சுற்றுச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் இடிந்த நிலையில் உள்ளது. தெப்பக்குளத்தில் படிக்கட்டுகள் சரியில்லாத காரணத்தால் பக்தர்கள் குளிக்க சிரமப்படுகின்றனர். ஒருசிலர் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இங்குள்ள கழிவறையும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இதனால் இங்கு வரும் பக்தர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெப்பக்குளத்தை சீரமைப்பதுடன், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.