< Back
மாநில செய்திகள்
குடிநீர் வால்வுக்காக அமைத்த தொட்டி சேதம்
விருதுநகர்
மாநில செய்திகள்

குடிநீர் வால்வுக்காக அமைத்த தொட்டி சேதம்

தினத்தந்தி
|
17 Oct 2023 1:46 AM IST

வெம்பக்கோட்டை அருகே சேதமடைந்த குடிநீர் வால்வு தொட்டியை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மானூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் செவல்பட்டியிலிருந்து வெம்பக்கோட்டை வழியாக சிவகாசி வரை குடிநீர் குழாய் கொண்டு செல்லப்படுகிறது. இதில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படாமல் இருக்க ஆங்காங்கே வால்வு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த வால்வு சேதமடையாமல் இருக்க அதனை சுற்றி சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெம்பக்கோட்டை, வனமூர்த்தி லிங்கபுரம், சத்திரப்பட்டி, மண்குண்டம்பட்டி, பேர்நாயக்கன்பட்டி, கொங்கலாபுரம் உள்ளிட்ட இடங்களில் வால்வு அமைக்கப்பட்டு தொட்டிகளும் கட்டப்பட்டு வருகின்றன.இன்னும் சில இடங்களில் வால்வு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த தொட்டிகளில் விரிசல் விழுந்து சேதமடைந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக துலுக்கன்குறிச்சி ஊராட்சியை சேர்ந்த அலமேலுமங்கைபுரத்தில் உள்ள வால்வு தொட்டியில் விரிசல் விழுந்து முற்றிலும் இடிந்து விழுந்து விட்டது.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்