< Back
மாநில செய்திகள்
மரம் வேரோடு சாய்ந்து வீடுகள் சேதம்
விருதுநகர்
மாநில செய்திகள்

மரம் வேரோடு சாய்ந்து வீடுகள் சேதம்

தினத்தந்தி
|
17 Jun 2022 12:07 AM IST

மரம் வேரோடு சாய்ந்து வீடுகள் சேதம் அடைந்தது.

ராஜபாளையம்,

ராஜபாளையம் நகராட்சியின் 18-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு மலையடிப்பட்டி நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள முத்துமாரி அம்மன் கோவில் அருகே பழமையான அரச மரம் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக பழமையான அந்த மரம் வேரோடு சாய்ந்து அருகில் இருந்த வீடுகளின் மேல் விழுந்தது. அந்த சமயம் வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஆனால் இந்த விபத்தில் பரமேஸ்வரி, நடராஜன், கருத்தப்பாண்டியன் ஆகியோருடைய வீடுகள் மற்றும் அம்மன் கோவில் கொட்டகை சேதமடைந்தது. மேலும் மரத்தின் அருகே இருந்த மின்சார கம்பமும் சாய்ந்ததால், அப்பகுதியை சுற்றி இருந்த 30-க்கும் மேற்பட்ட வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி அப்பகுதியை சேர்ந்த மக்கள் இருளில் தவித்தனர். மேலும், சாய்ந்த மரத்தை அகற்றி விட்டு, உடனடியாக மின் இணைப்பு வழங்கவும், சேதமான வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்