< Back
மாநில செய்திகள்

திருவாரூர்
மாநில செய்திகள்
சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகள் சேதம்

9 May 2023 12:15 AM IST
சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகள் சேதம்
வலங்கைமான் வட்டார பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த கிராமங்களில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் விலைநிலங்களில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையால் பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி செடிகள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே வேளாண்துறை அதிகாரிகள் சேதமடைந்த பருத்தி செடிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வலங்கைமான் வட்டார பகுதிகளில் தூர் வாரப்படாமல் உள்ள பல்வேறு வாய்க்கால்கள், குட்டை குளங்களை அரசு உடனடியாக தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.