விருதுநகர்
காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்
|வெம்பக்கோட்டை பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமாகின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை பகுதிகளில் காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதமாகின. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
பயிர்கள் சேதம்
வெம்பக்கோட்டை அருகே உள்ள அக்கரைப்பட்டி, காமராஜர் காலனி, விஜய கரிசல்குளம், கோட்டைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் கத்திரிக்காய், வெண்டைக்காய், சீனி அவரைக்காய், சூரியகாந்தி ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளனர்.
இங்குள்ள வைப்பாறு பகுதியில் ஏராளமான காட்டு விலங்குகளான மான், காட்டுப்பன்றிகள் அதிக அளவில் வசிக்கின்றன. விளைநிலங்களை சுற்றி வேலி அமைத்திருந்தாலும் வேலியை தாண்டி வந்து பயிர்களை இந்த விலங்குகள் சேதப்படுத்துகின்றன.
கடன் வாங்கி சாகுபடி
இதனால் பயிர்களை காப்பாற்ற முடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
அக்கரைப்பட்டி, காமராஜர் காலனி, விஜய கரிசல்குளம், கோட்டைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வெண்டைக்காய் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ளனர்.
இவற்றை சாகுபடி செய்தது முதல் அறுவடை வரை பல்வேறு இன்னல்களை அனுபவித்து காப்பாற்றி வருகின்றனர். வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன்களை வாங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.
நிவாரணம்
இந்த நிலையில் மான், காட்டுப்பன்றிகள் ஆகியவை வயலுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
என்ன தான் வேலி அமைத்தாலும் அவற்றை தாண்டி வந்து விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துகிறது. ஆதலால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர்.