< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
கண்மாய் மறுகால் உடைந்து பயிர்கள் சேதம்
|22 Oct 2022 12:15 AM IST
கண்மாய் மறுகால் உடைந்து பயிர்கள் சேதம் அடைந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி மூவன்பட்டி அருகில் பெரிய அகரத்து கண்மாய் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இந்த கண்மாய் நிரம்பியது, அருகில் உள்ள பாம்பாட்டி கண்மாயில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் மேற்கு கரை உடைந்து வயல்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த சில விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து சிங்கம்புணரி வட்டாட்சியர் சாந்தி உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் விரைந்து சென்று கண்மாயில் உடைந்த கரைப்பகுதியை ஜே.சி.பி. எந்திரம் கொண்டு மண்களை போட்டு செய்யப்பட்டது.
அதேபோல கனமழையால் அணியம்பட்டி கிராமத்தில் சின்ன அணியன் கண்மாய் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.