< Back
மாநில செய்திகள்
தீயில் எரிந்து சேதம்: கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு விரைந்து சான்றிதழ்கள் வழங்க பெற்றோர்கள் கோரிக்கை
மாநில செய்திகள்

தீயில் எரிந்து சேதம்: கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு விரைந்து சான்றிதழ்கள் வழங்க பெற்றோர்கள் கோரிக்கை

தினத்தந்தி
|
20 Sept 2022 8:57 AM IST

மாணவி ஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த 17.7.2022 அன்று நடந்த போராட்டம், கலவரமாக வெடித்தது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த 17.7.2022 அன்று நடந்த போராட்டம், கலவரமாக வெடித்தது.

அப்போது பள்ளி மற்றும் வாகனங்கள் சூறையாடப்பட்டதோடு, மாணவர்கள் சான்றிதழ்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. இதில் பள்ளி கட்டிடம் பலத்த சேதமடைந்தது. மேலும் போலீஸ் வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதையடுத்து பள்ளி மூடப்பட்டு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், கனியாமூர் தனியார் பள்ளியில் தீயில் எரிந்து சேதமடைந்த சான்றிதழுக்கு பதிலாக மாணவர்களுக்கு புதிய சான்றிதழ்கள் விரைந்து வழங்க வேண்டும் என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்