< Back
மாநில செய்திகள்
ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 16.9 அடியாக உயர்வு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 16.9 அடியாக உயர்வு

தினத்தந்தி
|
16 July 2023 2:30 AM IST

ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 16.9 அடியாக உயர்ந்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காமராஜர் அணை அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் குடகனாறு, கூழையாறு ஆகிய ஆறுகளில் இருந்து காமராஜர் அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்த அணை கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கட்டப்பட்டது ஆகும்.

இந்த அணையில் 23.5 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த ஆண்டு பெய்த மழையால் அணை நிரம்பியது. அதன்பின்னர் தொடர்ச்சியாக மழை பெய்யாததால் அணை நிரம்பவில்லை. எனினும் தினமும் அணையில் குடிநீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாததால், அணையின் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியது. அந்த வகையில் கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் 16 அடியாக இருந்தது. இதற்கிடையே கடந்த 5 நாட்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது.

இதனால் அணைக்கு குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் உயரத்தொடங்கியது. அந்தவகையில் நேற்று மாலை காமராஜர் அணையின் நீர்மட்டம் 16.9 அடியாக உயர்ந்தது. மேலும் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அணையின் நீர்மட்டம் 17 அடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்