< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு அரசு அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது -  ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு அனுமதி பெறாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

தினத்தந்தி
|
31 May 2023 4:05 PM IST

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறியிருப்பது முடியாத ஒன்று என மதுரையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மதுரை,

மதுரை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதுரை விமான நிலையம் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவோம் என்று கூறியுள்ளது தமிழக அரசு அனுமதி பெறாமல் அணை கட்ட முடியாது. தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள குறைபாடுகளை நீக்கி மீண்டும் அங்கீகாரம் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன், அய்யப்பன் எம்.எல்.ஏ., இளைஞரணி மாநில செயலாளர் வி.ஆர். ராஜ் மோகன், ஐ.பி.எஸ்.பாலமுருகன், ஊராட்சி தலைவர் முத்தையா, வழக்கறிஞர்கள் சரவணன், சுந்தரா, முருகேசன், மாரிசாமி உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்