< Back
மாநில செய்திகள்
பாலக்கோடு பகுதியில் தொடர் மழை:  சின்னாறு அணையில் இருந்து 3,500 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
தர்மபுரி
மாநில செய்திகள்

பாலக்கோடு பகுதியில் தொடர் மழை: சின்னாறு அணையில் இருந்து 3,500 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்

தினத்தந்தி
|
14 Nov 2022 12:15 AM IST

பாலக்கோடு:

பாலக்கோடு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சின்னாறு அணை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாற்றின் சுற்றுவட்டார பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் சின்னார் அணைக்கு அதிகரித்து வருகிறது.

மேலும் அணையில் இருந்து நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 3,200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இவ்வாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரால் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆறுகள், ஏரிகள், தும்பலஅள்ளி அணை, தர்மபுரி சோகத்தூர் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்