< Back
மாநில செய்திகள்
பால் உற்பத்தியாளர்களை  தீவன உற்பத்தி தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம்
தேனி
மாநில செய்திகள்

பால் உற்பத்தியாளர்களை தீவன உற்பத்தி தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டம்

தினத்தந்தி
|
16 Sept 2022 7:59 PM IST

பால் உற்பத்தியாளர்களை தீவன உற்பத்தி ெதாழில் முனைவோராக உருவாக்கம் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை, தீவன உற்பத்தி தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் ஆண்டுக்கு 3 ஆயிரத்து 200 டன் ஊறுகாய் புல் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான பண்ணை உபகரண கருவிகள், புல் அறுவடை மற்றும் புல் நறுக்கும் கருவிகள், டிராக்டர் போன்றவை கொள்முதல் செய்ய 25 சதவீதம் மானியமாக ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்படவுள்ளது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் பால் உற்பத்தியாளர்கள், கால்நடை வளர்ப்போர், சுயஉதவிக்குழுவினர் தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் வருகிற 26-ந் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்