< Back
மாநில செய்திகள்
பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகள்

தினத்தந்தி
|
14 Sept 2023 5:14 PM IST

திருவண்ணாமலையில் பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகளை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறை மூலம் அழிவின் விளிம்பில் உள்ள பண்டைய பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு கறவை மாடு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினார்.

இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தை சேர்ந்த 639 பயனாளிகளுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம் ரூ.2 கோடியே 22 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இலவச கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 25 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஜெயகுமார், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்