< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக ஆபத்தான நிலையில் இருந்த   கன்னியாகுறிச்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது
திருவாரூர்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ஆபத்தான நிலையில் இருந்த கன்னியாகுறிச்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது

தினத்தந்தி
|
27 Aug 2022 11:41 PM IST

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக ஆபத்தான நிலையில் இருந்த கன்னியாகுறிச்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது.

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக ஆபத்தான நிலையில் இருந்த கன்னியாகுறிச்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உள்ள கன்னியாகுறிச்சியில் வடிவழகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வாசலில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்து காணப்பட்டது. அதன் சிமெண்டு காரைகள் பெயர்ந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிந்தன.

எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இருந்ததால் பொதுகமக்கள் அச்சத்தில் இருந்தனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு, புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்தனர்.

உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்