< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார்பெட்டி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார்பெட்டி

தினத்தந்தி
|
25 Jun 2022 4:06 PM GMT

தினத்தந்தி புகார்பெட்டி

காத்திருக்கும் ஆபத்து

தக்கலையில் இருந்து திருவிதாங்கோடு செல்லும் சாலையில் கேரளபுரம் பகுதியில் 8 மாதத்திற்கு முன்பு பெய்த பெருமழையில் அப்பகுதி சாலையின் குறுக்கே உள்ள அடிமடையில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் அப்பகுதி வெள்ள காடானது. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் அடிமடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய சாலையின் இருபுறமும் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு தண்ணீர் வடிந்தோட வழிவகை செய்யப்பட்டது. அதன்பிறகு பள்ளம் மூடப்படாததால், வாகனத்தில் செல்பவர்கள் காத்திருக்கும் ஆபத்தை உணர்ந்து பயணம் செய்யாவிட்டால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீகுமார், கேரளபுரம்.

அகற்றப்பட்டது

தோவாளை மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தின் அருகே இருந்த மின்கம்பம் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது பழைய மின்கம்பத்தின் அடிப்பகுதி சரியாக அகற்றப்படாததால், கம்பி நீட்டிக்கொண்டு இருந்தது. அது பாதசாரிகளின் காலில் காயத்தை ஏற்படுத்தியது. எனவே அந்த மின்கம்பியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதுபற்றி "தினத்தந்தி" புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன் பேரில், நீட்டிக்கொண்டு இருந்த கம்பி முழுமையாக அகற்றப்பட்டது. இதுபற்றி செய்தி வெளியிட்ட "தினத்தந்தி"-க்கும், நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


தொற்றுநோய் பரவும் அபாயம்

நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் இருந்து கோட்டார் கம்பளம் செல்லும் சாலையில் பாறைக்கால் மடத்தெரு உள்ளது. இந்த தெருவின் அவலநிலையை தான் படத்தில் பார்க்கிறீர்கள். கழிவுநீர் தெருவில் பாய்வதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தொற்று நோய் பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பி.ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.

சாலை சீரமைக்கப்படுமா?

பேச்சிப்பாறை அணையின் பிரதான கால்வாய் குலசேகரம் தும்பகோடு வழியாக செல்கிறது. இதில் கால்வாய் கரையோரமாக அரியாம்பகோடு செல்லும் சாலையை ஒட்டிய பகுதி உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பொதுப்பணித் துறை மற்றும் குலசேகரம் பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும்.

-தேவசகாயம், குலசேகரம்.

தூர்வார வேண்டிய குளம்

நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை பகுதியில் சிறுதாமரைக்குளம் உள்ளது. இந்த குளத்து நீரை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கும், பாசனத்துக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த குளம் சரிவர பராமரிக்கப்படாததால், பாசி மற்றும் செடி-கொடி படர்ந்து உள்ளது. எனவே குளத்தை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்டாலின், மாடத்தட்டுவிளை.

துரிதமாக பணியை முடிக்க வேண்டும்

ஆரல்வாய்மொழியில் இருந்து குமாரபுரம் செல்லும் சாலையில் சுபாஷ் நகர் ெரயில்வே பாலப்பணி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. பாலப்பணி பாதியில் நிற்கிறது. இதனால் குமாரபுரம், சுபாஷ் நகர் பகுதியில் பணிபுரியும் பொதுமக்கள் ஆரல்வாய்மொழிக்கு பல கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலப்பணியை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.சி முத்துக்குமார் , ஆரல்வாய்மொழி.

மேலும் செய்திகள்