< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
1 May 2023 2:51 AM IST

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி'க்கு பாராட்டு

பவானிசாகர் அருகே இக்கரை நெகமம் ஊராட்சியில் ஆண்களுக்கென பொதுக் கழிப்பிடம் உள்ளது. இது சுகாதாரமின்றி காணப்படுகிறது. இதனால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாமல் ஆண்கள் அவதிப்பட்டு் வருகிறார்கள். எனவே இதனை பராமரித்து பயன்பாட்டு்க்கு விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கழிப்பிடம் சுத்தம் செய்யப்பட்டு் பயன்பாட்டு்க்கு விடப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கே.பாரதிராஜா, இக்கரைநெகமம்.

ஆபத்தான ஆணி

ஈரோடு ரெயில் நிலைய 3-வது நடைமேடையில் பயணிகள் காத்திருப்பு அறை உள்ளது. இந்த காத்திருப்பு அறை அருகே பயணிகள் அமர்ந்து இருப்பதற்காக இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் ஒரு இருக்கை அமைக்கப்பட்டு இருந்த தரை பகுதியில் 4 ஆணிகள் வெளியே நீண்டுகொண்டு இருக்கிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் மற்றும் குழந்தைகளின் கால்களில் ஆணிகள் குத்தி பதம் பார்த்துவிடும் நிலையில் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் காணப்படும் ஆணிகளை அந்த இடத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கார்த்திகா, ஈரோடு.

வீணாகும் கழிப்பறை

ஈரோடு மாநகராட்சியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். அதுபோன்ற இடங்களில் தற்காலிகமாக கழிப்பறை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான தற்காலிக கழிப்பறை பொதுஇடத்தில் வைத்து பராமரிக்கப்படாமல், மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பழைய பொருட்கள் கிடக்கும் பகுதியில் வீணாக போட்டு வைக்கப்பட்டு உள்ளது. பார்ப்பதற்கு புதிதுபோல தோன்றும் இந்த கழிப்பறைகளை வீணாக்காமல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சுந்தர், ஈரோடு

தேங்கி நிற்கும் கழிவுநீர்

பவானி அருகே உள்ள ஒரிச்சேரி ஊராட்சி இந்திரா நகரில் சாக்கடை வடிகால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் ஓடி ரோட்டோரம் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக தெருக்களில் நடந்து செல்ல முடியவில்லை. துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே இந்திரா நகர் பகுதியில் சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

செந்தில், பவானி.

ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ரோட்டில் சாக்கடை வடிகால் செல்கிறது. இதிலுள்ள கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு செல்ல வழியின்றி பல நாட்களாக தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்களும் உற்பத்தியாகியுள்ளன. நோய் பரவ வாய்ப்புள்ளது. உடனே அடைப்பை சரிசெய்து கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தனுஷ், ஈரோடு.

குவிந்துள்ள குப்பைகள்

ஈரோடு திரு.வி.க. ரோட்டில் உள்ள மாநகராட்சி அலுவலர்கள் குடியிருப்பு பின்புறம் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு்ள்ளது. நோய் பரவ வாய்ப்புள்ளது. குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குப்பைகள் கொட்டு்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

வேலு, ஈரோடு.

மின்கம்பம் மாற்றி அமைக்கப்படுமா?

ஈரோடு முனிசிபல் காலனி ரோட்டில் இருந்து வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் ரோட்டு்க்கு செல்லும் வளைவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இதிலுள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் பேராபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. உடனே மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ முன் வர வேண்டும்.

ராஜ், முனிசிபல் காலனி.

Related Tags :
மேலும் செய்திகள்