< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
1 Jan 2023 9:05 PM GMT

தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-ப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திறந்து கிடக்கும் சாக்கடை

ஈரோடு மாநகராட்சி 2-வது மண்டலம் 21-வது வார்டு மாணிக்கம் பாளையம் ஹவுசிங்யூனிட் ரோட்டில் பாதாள சாக்கடை மூடி இல்லாமல் உள்ளது. அருகே பள்ளிக்கூடம் மற்றும் மசூதி உள்ளது. அதனால் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் இந்த ரோட்டில் அடிக்கடி சென்று வருகிறார்கள். எனவே மக்களின் பாதுகாப்பை கருதி மாநகராட்சி அதிகாரிகள் உடனே திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைக்கு மூடிபோட வேண்டும்.

பொதுமக்கள், மாணிக்கம்பாளையம்.

தார் சாலை வேண்டும்

ஈரோடு பெருந்துறை ரோட்டில் இருந்து நல்லிபாளையம் செல்லும் மெயின் ரோடு மிகவும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

மின்கம்பத்தில் செடி

அந்தியூர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தெரு விளக்கு ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தை சுற்றிலும் செடி, கொடிகள் படர்ந்து உள்ளது. இதனால் அதில் உள்ள மின் விளக்கின் வெளிச்சம் தெருவில் விழுவதில்லை. இதன்காரணமாக வீதியில் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும் மின் கம்பத்தில் வளர்ந்த செடி, கொடிகளால் மின் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே மின்கம்பத்தில் படர்ந்து வளர்ந்து உள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள், புதுப்பாளையம்.

தெருநாய் தொல்லை

அந்தியூர் பகுதியில் 25-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன. அவ்வாறு சுற்றித்திாியும் நாய்கள் ஒன்றோடொன்று சண்டையிட்டு கொண்டு ரோடுகளில் குறுக்கும், நெடுக்குமாக ஓடுகின்றன. இதில் சில நாய்கள் இருசக்கர வாகனங்களின் குறுக்கே பாய்ந்து ஓடும்போது, அந்த வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். மேலும் ரோடுகளில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சுற்றித்திரியும் தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவீந்திரன், அந்தியூர்.

கழிப்பறை தேவை

சோலார் வழியாக ஈரோடு, கரூர், முத்தூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்துக்கு பல்வேறு பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் தினமும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். ஆனால் அங்கு கழிப்பறை இல்லை. இதனால் பயணிகள் தங்களுடைய இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சோலார் பஸ் நிறுத்தத்தில் கழிப்பறை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சோலார்.

ஈக்களால் அவதி

ஈரோடு வீட்டு வசதி வாரியம் பிரிவு பகுதி 7-ல் குப்பை அரைக்கும் பணிமனை உள்ளது. இந்த பணிமனையில் ஈக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகி உள்ளது. இதனால் இந்த ஈக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து உணவுப்ெபாருட்கள் மீது உட்கார்கிறது. இதனால் அந்த பகுதியில் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பை அரைக்கும் பணிமனையை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ஈரோடு.

குடிநீர் குழாயில் உடைப்பு

ஈரோடு சத்தி ரோட்டில் ரவுண்டானா அருகே ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதற்காக குழி தோண்டும்போது, குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வீணாகிறது. மேலும் சுவஸ்திக் கார்னர் அருகே தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யவேண்டும்.

மு.ராமன், வீரப்பன்சத்திரம்.

Related Tags :
மேலும் செய்திகள்