< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
30 Oct 2022 9:48 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பையை அகற்ற வேண்டும்

கோபியில் இருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் உள்ள பாலம் அருகே குப்பை ெகாட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பையில் டீ கப்புகள், பேப்பர்கள் மற்றும் தீப்பிடிக்கக்கூடிய பொருட்கள் குவிந்து கிடக்கிறது. யாராவது அந்த குப்பையில் தீ வைத்து விட்டால் அந்த பகுதியில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே குப்பையை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

டவுன் பஸ் இயக்க வேண்டும்

அந்தியூரில் இருந்து சத்தியமங்கலம் செல்ல டவுன் பஸ் வசதி இல்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் புறநகர் பஸ்கள் அந்தியூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு இயக்கப்படுகின்றன. இதன்காரணமாக பொதுமக்கள் அந்தியூரில் இருந்து கோபி சென்று பின்னர் சத்தியமங்கலத்துக்கு வேறு பஸ் மாறி செல்ல வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயம் மற்றும் பண விரயம் ஏற்படுகிறது. எனவே அந்தியூரில் இருந்து சத்தியமங்கலத்துக்கு டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், அந்தியூர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோபியில் இருந்து நாதிபாளையம் செல்லும் ரோட்டில் கலராமணி பகுதியில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

குழி மூடப்படுமா?

ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு அருகில் திண்டல் செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குழி தோண்டப்பட்டது. 10 அடி ஆழம் குழி தோண்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் மூடப்படாமல் உள்ளது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கூட மற்றும் கல்லூரி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் பள்ளத்தில் விழும் ஆபத்தான சூழ்நிலையும் உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனிசாமி, ஈரோடு.

திசைமாறும் தெருவிளக்கு

நம்பியூரை அடுத்த அஞ்சானூர் ஊராட்சிக்கு உள்பட்ட வேமண்டம்பாளையத்தில் இருந்து பட்டிமணியாகாரன் பாளையம் செல்லும் ரோட்டில் மாரியம்மன் கோவில் அருகே தெருவிளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கை யாரோ சிலர் அடிக்கடி வெளிச்சம் தெரியாத வகையில் திசை திருப்பி விடுகிறார்கள். எனவே மின்வாரிய அதிகாரிகள் தெருவிளக்கை முறையான திசையில் மாற்றுவதோடு யார் அதை திசை திருப்புகிறார்கள்? என்று கண்காணித்து போலீசில் புகார் அளிக்கவேண்டும்.

குமார், நம்பியூர்.

சுற்றுசூழல் மாசு

கோபியிலிருந்து குன்னத்தூர் செல்லும் ரோட்டில் வேட்டைக்காரன் கோவில் பகுதியில் மின் உற்பத்தி பகிர்மான அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே ரோடு ஓரமாக குப்பைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழலும் மாசுபட்டு விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோடு ஓரம் குவிந்துள்ள குப்பையை அகற்ற ஆவன செய்யவேண்டும்.

நாதன், கோபி.

Related Tags :
மேலும் செய்திகள்