< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ஈரோடு
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
17 Sep 2022 10:01 PM GMT

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வீணாகும் தண்ணீர்

நம்பியூரில் உள்ள 7-வது வார்டில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாக ரோட்டில் செல்கிறது. அந்த பகுதியில் உள்ள ரோடும் பழுதடைந்துவிட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நம்பியூர்.

சாய்ந்த மின்கம்பம்

ஈரோடு சோலார் புதூரில் உள்ள நகராட்சி நகரில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. சற்று பலமாக காற்று அடித்தால் மின்கம்பம் விழுந்துவிடும். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்குள் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.

கிருஷ்ணன், சோலார்புதூர்.

பகலில் ஒளிரும் மின்விளக்கு

சித்தோட்டில் காலை 8.30 மணி அளவில் கூட தெருவிளக்குகள் ஒளிர்கின்றன. பட்டப்பகலில் தெருவிளக்குகளை அணைக்காமல் ஒளிரவிட்டால் தேவையற்ற மின்கட்டணமும் செலுத்தவேண்டும். மின்சாரமும் வீணாகும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?

பொதுமக்கள், சித்தோடு.

பழுதடைந்த சாலை

அந்தியூரில் இருந்து வெள்ளித்திருப்பூர் செல்லும் ரோட்டில் கொல்லம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் சாலை பழுதடைந்து பல மாதங்களாக அப்படியே உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறுகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மாதேஸ்வரன், கொல்லம்பாளையம்.

கொசு தொல்லை

ஈரோடு வீரபத்திரா வீதியில் சாக்கடைகள் தூர்வாரப்படாமல் உள்ளன. இதனால் கழிவு நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகிவிட்டன. இரவு நேரங்களில் பொதுமக்களால் தூங்க முடியில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீரபத்திரா வீதியில் உள்ள சாக்கடைகளை தூர்வாரி கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தியாகராஜன், வீரபத்திரா வீதி. ஈரோடு.

Related Tags :
மேலும் செய்திகள்